சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் தனது விமானங்களுக்குத் தேவையான எரிபொருளை இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்வதன் காரணமாக மாதாந்தம் ஏழு மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக நட்டத்தை சந்திக்கிறதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இழப்பு, எரிபொருள் வாங்குவதற்கும், இந்தியாவுக்குப் பயணம் செய்வதற்கும், எரிபொருள் மற்றும் விமானங்களின் தேய்மானத்துக்கும் ஆகும் செலவை ஈடுசெய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் இருபத்தைந்து முதல் முப்பது வரையிலான விமானங்கள் எண்ணெய் பெற இந்தியாவுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளதாக கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறிலங்கன் எயார்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனத்தின் 51% பெரும்பான்மை பங்குகள் அரசாங்கத்திடம் தக்கவைக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.