யாழ்.நகரின் மத்தியில் குழி! கவனமெடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.. |

யாழ்.மாநகரின் மத்தியில் கழிவு நீர் வடிகானுக்கு மேல் ஏற்பட்டிருக்கும் பாரிய குழியினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர் கொண்டிவருகின்றனர்.

மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் வீதியின் நடுவே கழிவு நீர்செல்லும் வாய்க்கால் ஒன்றில்  பாரிய குழி ஏற்பட்டுள்ளதால் யாழ் நகரில் பயணிக்கும் பொதுமக்கள் பாரிய இடையூறுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

மாநகர சபைக்கு சொந்தமான குறித்தபகுதியில் வீதியில் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாகவுள்ள குழி திருத்தப்படவோ  அல்லது வீதியால் பயணிப்போருக்கு அவ்விடத்தில் பாரிய குழி உள்ளது என்ற எச்சரிக்கை போடுவதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர.

குறித்த குழி வீதியின் நடுவில் காணப்படுவதன் காரணமாக அவ்விடத்தில் விபத்துக்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews