வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் கணவனால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை!
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி தாய் வீட்டில் தங்கியிருந்த பெண் ஒருவர் கணவனால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தம்புள்ளை – கொட்டவெல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
கொட்டவெல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான கீதா குமாரி கருணாதிலக என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் கடந்த 31ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி தாய் வீட்டில் இருந்த போது கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்குமிடையில் நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணை நேற்றைய தினம் இடம்பெற்றது.
கொலையைச் செய்த சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.