இலங்கை தொடர்பில் ஐ.நாவில் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கைக்கு அண்மையில் 04 பில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிர கம்போஜ் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

இந்தியா தனது அருகிலுள்ள அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிய அவர், அண்டை நாடாகவும் நெருங்கிய நண்பராகவும் இருக்கும் இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

2017 இல் இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து நிறுவிய அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியம், 51 வளரும் நாடுகளில் 66 திட்டங்களுக்கு வளர்ச்சி ஆதரவை வழங்கியுள்ளது என்பதையும் அவர் இங்கு வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து இந்தியா அவசர உதவியாக பாரிய கடனை வழங்கியதுடன் தமிழக மக்கள் இலவச உணவு மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin