இன்று (16) இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.00 மணி வரை தினமும் கொவிட்-19 தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஆயினும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்கள், மற்றும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுமென, கொவிட்-19 பரவலைத் தடுக்கும தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதேவேளை நாளை (17) நள்ளிரவு முதல் திருமணங்களை நடாத்த அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மண்டபங்கள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வைபவங்களாக நடாத்துவதற்கே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, திருமண தம்பதியினர், அவர்களுடைய பெற்றோர், சாட்சியாளர்கள் சகிதம் பதிவாளரின் பங்குபற்றுதலுடன் திருமணத்தை நடாத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், உணவகங்களில் ஒரே தடவையில் அதன் 50% இலும் குறைந்த கொள்ளளவிலான நபர்களுக்கே அமர்ந்து உண்ண அனுமதி வழங்கப்படுமென, அவர் அறிவித்துள்ளார்.
ஆயினும் பொது இடங்களில் நடமாடுவதை முடிந்த அளவில் தவிர்க்குமாறு, அரசாங்கம் கேட்டுக் கொள்வதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.