ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் தங்கியிருந்த ராணியார் இரண்டாம் எலிசபெத் தமது இறுதி நாட்களில் துடுக்காகவே காணப்பட்டாலும், உணவை மிகவும் குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணியார் இரண்டாம் எலிசபெத் தமது 96வது வயதில் தமக்கு மிகவும் பிடித்தமான பால்மோரல் மாளிகையில் வைத்து காலமானார். தமது இறுதி நாட்களில் அவர் துடுக்காகவே காணப்பட்டாலும், உணவை பெருமளவு குறைத்துக் கொண்டதுடன் படியேறவும் சிரமப்பட்டார் என்றே தற்போது தெரியவந்துள்ளது.
செப்டம்பர் 4ம் திகதி தமது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்து விருந்து வைத்து மகிழ்ந்துள்ளார். மிகவும் சோர்வான நிலையில் அப்போது அவர் காணப்பட்டாலும், அனைவருடனும் உரையாடி, விருந்தின் இறுதி நிமிடம் வரையில் சாப்பாட்டு அறையில் அமர்ந்திருந்துள்ளார்.
மேலும், கடைசி நாட்களில் அவரது உடல் ஒத்துழைக்க மறுத்ததால் மட்டும் எழுந்து நிற்கவோ நடக்கவோ அதிகமாக அவர் முயற்சிக்கவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக படிக்கட்டுகளில் ஏறவோ இறங்கவோ அவர் மிகவும் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.
உணவை அவர் மிகவும் குறைத்துக் கொண்டாலும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் துடுக்காகவும் அவர் காணப்பட்டுள்ளார். மேலும், பால்மோரல் மாளிக்கு வந்துவிட்டால் முடக்கமின்றி நடைப்பயிற்சிக்கு செல்வார், மட்டுமின்றி சிறு சுற்றுலாவுக்கும் செல்வார்.
ஆனால் இந்த முறை அவை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. அத்துடன் ராணியாருக்கு மிகவும் பிடித்தமான குறுக்கெழுத்து போட்டிகளிலும் இறுதி நாட்களில் ஈடுபடவில்லை.
எனினும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். குறிப்பாக வானிலை அறிக்கைகளை கவனித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.