வல்லிபுரத் தேனமுதம் பாகம் இரண்டு எனும் வல்லிபுரம் குருக்கட்டு சித்திவிநாயகர், வல்லிபுர ஆள்வார் ஆலய இசைப்பேழை இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா நேற்று காலை 9.30 மணியளவில் ஆலய மண்டபத்தில் தீம்புனல் பத்திரிகை ஆசிரியர் சூரன் ஏ.ரவிவர்மா தலமையில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக மங்கல விளக்கினை வல்லிபுர ஆழ்வார் ஆலய குரு பிரம்ம ஸ்ரீ மு.சுதர்சனக் குருக்கள், முன்னாள் மாவட்ட நீதிபதி சு.வசந்தசேனன், குருக்கட்டு பிள்ளையார் ஆலய குரு ஆகியோர் ஏற்றினர்.
தொடர்ந்து ஆசியுரையினை வல்லிபுர ஆலள்வார் ஆலய குரு பிரமசிறி சுதர்சனக் குருக்கள் நிகழ்தியதை தொடர்ந்து தேவாரம் வல்லிபுர ஆழ்வார் ஆலய மகா சபை செயலாளர் சட்டத்தரணி ராகவானந்த் பாடினார்.
அதனை தொடர்ந்து தலமை உரையினை நிகழ்வின் தலைவரும் தீம்புனல் பத்திரிகை பிரதம ஆசிரியருமான சூரன். ஏ. ரவிவர்மா நிகழ்தினார்.
தொடர்ந்து கருத்துரைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் செல்வி.சே.செல்வசுகுணா, வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் தி.கார்த்திகேயன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சு.வசந்தசேனன் ஆகியோர் நிகழ்த்தினர்.
அதனை தொடர்ந்து நிகள்வின் பிரதம விருந்தினர் முன்னாள்
ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சு.வசந்தசேனன் ஒலிப்பேளையினை வெளியீட்டு வைக்க பிரபல வர்த்தகர் வனிக்கா மருந்தக உரிமையாளர் இராசரத்தினம். கஜன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டன.
வெளியீட்டுரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் வேல்.நந்தகுமார் நிகழ்த்தினார். மதிப்பீட்டு உரையினை ஓய்வு பெற்ற அதிபர், ஞானபண்டித சகலகலா வித்தகர் யு.சிவநாதன் நிகழ்த்தினார்.
ஏற்புரையினை பாடலாசிரியர் அருட்கவியரசர் பொன் சக்திவேல், நிகழ்த்தினார்.
நன்றியுரையினை வல்லிபுர ஆள்வார் ஆலய மகாசபை செயலாளர், சட்டத்தரணி ச.இராகவானந்தன் நிகழ்த்தினார்.
நன்றியுரையினை வல்லிபுர ஆள்வார் ஆலய மகாசபை செயலாளர், சட்டத்தரணி ச.இராகவானந்தன் நிகழ்த்தினார்.
இதில் குருக்கட்டு பிள்ளையார் ஆலய நிர்வாகிகள், வல்லிபுர ஆழ்வார் ஆலய நிர்வாகிகள், நலன் விரும்பிகள் அடியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.