பாடப்புத்தகங்கள் அச்சிடல் – பணமில்லை,காகித தட்டுப்பாடு – கல்வியமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 33 இலட்சம் பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்கு 1600 கோடி ரூபாய் செலவிடவேண்டி உள்ளதாலும் காகித தட்டுப்பாடு காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் முதன்மைச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதன்படி பழைய பாடப்புத்தகங்களை சேகரித்து மாணவர்களுக்கு வழங்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என அவர் கூறினார்.

பாடசாலைகளில் தற்போது மாணவர்களுக்கான இரண்டாம் தவணைக்குரிய தேர்ச்சி அறிக்கை வழங்கப்பட்டு மூன்றாம் தவணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin