இலங்கையில் தொடரும் மருந்து பற்றாக்குறை – சத்திரகிசிச்சைகள் தடைப்படும் அபாயம்

இலங்கையில் தொடரும் மருந்து பற்றாக்குறை காரணமாக சத்திரகிசிச்சைகள் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருந்து பற்றாக்குறை தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் உள்ள ஆய்வுகூடங்கள், வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளை பாதித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில், லேடி ரிஜ்வே வைத்தியசாலை உட்பட நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் தொடர்ந்தும் அன்டிபயோட்டிக்ஸ் மற்றும் வலி நிவாரணிகள்,பஞ்சு போன்றவற்றிற்கான பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொள்கின்றதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், சில மருத்துவமனைகள் சாதாரண சத்திரகிசிச்சைகள் குறித்து மாத்திரம் கவனம் செலுத்துகின்றன எனவும், சில மருத்துவமனைகள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான சத்திரகிசிச்சைகளை மேற்கொள்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மருந்துகள் விநியோக பிரிவில் போதியளவு பொருட்கள் இன்மையே பற்றாக்குறைக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் மருந்து பற்றாக்குறைகள் உள்ளபோதிலும் கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை தொடர்ந்தும் இயங்குகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin