வெளிநாடுகளில் அனாதரவாக தவிக்கும் இலங்கையர்கள்

ஆங்கில மொழியை கையாள முடியாமல் வெளிநாடுகளிலும், விமான நிலையங்களிலும் பல இலங்கையர்கள் அனாதரவாக இருக்கும் நேரங்களும் உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுமு் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகக்கிண்ண கோப்பைக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணிக்கு ஆங்கிலம் பேச தெரியாவிட்டால் என்ன நடக்கும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, ஆங்கில மொழியில் தேர்ச்சி பெறும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த வருடம் முதல் அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் ஆண்டு முதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin