இலங்கை மத்திய வங்கி இன்றைய (ஒக்டோபர் 05) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 359 ரூபா 16 சதமாகவும்,
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 369 ரூபா 91 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 424 ரூபா 34 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 408 ரூபா 17 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 370 ரூபா 47 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு பெறுமதி 355 ரூபா 61 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.