ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி நடவடிக்கை! விசேட வர்த்தமானி வெளியீடு

ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை ஆகியன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை ஆகிய தி்ணைக்களங்கள் பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.

முன்னதாக, ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் தொழில்நுட்ப அமைச்சின் கீழும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழும் இருந்தது.

தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இருந்தது.

இதன்படி, பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இருந்த கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கைத்தொழில் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin