கல்வி மற்றும் தொழிலின் நிமித்தம் வரும் பெண்களிற்கு பாதுகாப்பான இருப்பிட வசதி திறந்து வைப்பு.

கல்வி மற்றும் தொழிலின் நிமித்தம் வரும் பெண்களிற்கு பாதுகாப்பான இருப்பிட வசதி அண்மயல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திருச்சபையின் முறிகண்டி ஆலய வளாகத்தில் புனித பவுல் பெண்கள் விடுதியே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் தொழிலின் நிமித்தம் வரும் பெண்களிற்கு பாதுகாப்பான இருப்பிட வசதியை வழங்கும் நோக்குடன் குறித்த பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு அன் காலை 10.30 மணியளவில், தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் இணை திட்ட அலுவலர் ஞானசங்கரி சப்தசங்கரி தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வில் பேராயர் டானியல் எஸ் தியாகராஜாவின் ஆசீர்வாதத்துடன், நிறைவாழ்வு மையத்தின் இயக்குனர் டொக்டர் தயாளினி தியாகராஜா திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் செயலாளரும், யாழ்ப்பாணக் கல்லூரி முதல்வருமான DS சொலமன், அருட்தந்தையர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கல்வி மற்றும் தொழிலின் நிமித்தம் வரும் பெண்களிற்கு பாதுகாப்பான இருப்பிட வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட குறித்த பணிக்கு பலரும் வரவேற்பளித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்திற்கு பட்ட படிப்பிற்காக சென்றுள்ள மாணவர்களிற்கான பாதுகாப்பான இருப்பிடத்தை அமைத்து தரும் வகையில் ஏற்பாடு செய்து கொடுக்க பலராலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் 2009ம் ஆண்டு வரை முறிகண்டி பெண்கள் இல்லமாக இயங்கிவந்த கட்டட தொகுதி சீர் செய்யப்பட்டு, இன்று திறந்து வைக்கப்பட்டது.

தற்பொழுது காணப்படும் சூழலில், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குறித்த பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தூர பிரதேசங்களில் இருந்து செல்லும் பெண் பிள்ளைகள் குறித்த பகுதியில் பாதுகாப்புடன் தங்கி தொழில்புரியவும், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin