இலங்கை உள்ளிட்ட 54 நாடுகளுக்கு நிவாரணம் தேவை! ஐ.நா அறிவிப்பு

உலகளவில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், உலகில் வறிய மக்கள் மிகவும் அதிகமாக வாழும் நாடுகளான இலங்கை உள்ளிட்ட 54 நாடுகளுக்கு அவசர கடன் உதவி தேவை என ஐ.நா தெரிவித்துள்ளது.

ஐ.நா இன்று (11.10.2022) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வளர்ந்து வரும் அதிகளவான நாடுகள் பாரிய கடன் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், “செயலற்ற தன்மையின் அபாயங்கள் பயங்கரமானவை” (The risks of inaction are dire) என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.

வறிய கடனாளி நாடுகள் பல ஒன்றிணைந்து பாரிய பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் மேலும் பலர் தங்கள் கடன்களை திருப்பி செலுத்துவதற்கோ அல்லது புதிய நிதி உதவிகளை பெற்றுக் கொள்ளவோ முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஒன்றிணைக்கப்பட்ட நிதி, பணச் சுருக்கங்கள் மற்றும் குறைந்த வளர்ச்சி போன்ற காரணங்கள் உலகளாவிய ரீதியில் ஏற்ற இறக்கத்தை தூண்டுவதால் சந்தை நிலைமைகள் வேகமாக மாறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் 19 தொற்றினால் நீண்ட காலம் பாதிக்கப்பட்ட பல நாடுகளில் இன்று பாரிய கடன் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாகவும் ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.

Recommended For You

About the Author: admin