மேஜர் ஜெனரல் ரவி இரட்ணசிங்ம் சவால் கிண்ணத்திற்க்கான உதைபந்தாட்ட போட்டி.

மேஜர் ஜெனரல் ரவி இரட்ணசிங்ம் சவால் கிண்ணத்திற்க்கான விலகல் முறையிலான  உதைபந்தாட்ட போட்டி நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் 551 வது படைப்பிரிவிற்க்கு உட்பட்ட பருத்தித்துறை, மற்றும் கரவெட்டி பிரிதேச செயலர் பிரிவுகளுக்குள் 18 கழகங்களுக்கு இடையில் நடாத்தப்படவுள்ள ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ரவி ரட்ணசிங்கம்  கிண்ணத்திற்க்கான உதைபந்தாட்ட போட்டியை பருத்தித்துறை பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை .சிறி, இலங்கை இராணுவத்தின் 551 படைப்பிரிவின்  பிரிகேடியர் சிந்திக்க விக்கிரமசிங்க, கேணல் ரூவன் பெர்ணாண்டோ,  உட்பட்டவர்கள்  சம்பிர்தாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
இதில் சிவாநந்தா விளையாட்டுக்கழகமும்,  ஆதிசக்தி  விளையாட்டுக் கழகமும், மோதியதில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. தண்ட உதை மூலம் சிவானந்தா விளையாட்டு கழகம் 3 கோல்கள் போட்டு வெற்றியீட்டியது.
ஆதிசக்தி விளையாட்டு கழகம் இரண்டு கோல்களை போட்டது.
தொடர்ந்து  மனோகரா விளையாட்டு கழகமும்  கொலின்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன. இதில் மனோகரா விளையாட்டுக் கழகம் 6 கோல்களை போட்டு வெற்றியீட்டியது.
கொலின்ஸ் விளையாட்டு கழகம் ஒரு கோலைப் போட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews