இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து மைதானத்தின் விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கினை நிகழ்வின் பிரதம விருந்தினரான அம்பன் கிராம சேவகர் திருமதி தனுசியா பிரதீபன், சிறப்பு விருந்தினரான வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் சச்சிதானந்தம் கபில்ராம், அம்பன் சிவனொளி முன்பள்ளி ஆசிரியை செல்வி சுகன்யா சிறிதரன், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் யாழ் மாவட்ட பரிதிநிதி உ.நிதர்சன், உட்பட பலரும் ஏற்றினர்.
தொடர்ந்து தேசிய கொடியினை நிகழ்வின் பிரதம விருந்தினரும் அம்பன் கிராம சேவகருமான தனுசியா பிரதீபன் ஏற்றியதை தொடர்ந்து கழக கொடியை கழக தலைவர் உ.நிசாந்தன் ஏற்றினர்.
தொடர்நது விளையாட்டை சம்பிர்தாய பூர்வமாக நிகழ்வின் பிரதம சிறப்பு கௌரவ விருந்தினர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இறிதிப் போட்டிக்கு தெரிவாகிய கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகமும், மருதங்கேணி சிறிமுருகன் விளையாட்டு கழகமும் மோதியது.
இதில் கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
தொடர்ந்து வெற்றியீட்டிய கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகமும் போட்டியை நடாத்யிய அம்பன் சிவனொளி விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டது.
அப் போட்டியிலும் கட்டைக்காடு சென் மேரி்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள், பதக்கங்கள், வெற்றிக் கோப்பைகள் என்பவற்றை நிகழ்வின் பிரதம விருந்தினர் தனுசி்யா பிரதீபன், சிறப்பு விருந்தினர் ச.கபில்ராம் ,இளைஞர் சேவை மன்றத்தின் யாழ் மாவட்ட பிரதிநிதி உ.நிதர்சன், ஊடகவியலாளர் அல்வாய் நேசன், விளையாட்டுக்கழக மூத்த உறுப்பினர்கள் வழங்கி கௌரவித்தனர்.
இதில் வடமராட்சி கிழக்கிற்க்கு உட்பட்ட கழகங்களின் வீரர்கள், கிராம அயல் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.