கடுமையான தீர்மானங்கள் பலவற்றை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நோர்காணல் ஒன்றின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்கள் பலவற்றை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரி திருத்தங்கள், வட்டி விகித உயர்வு போன்றவை இவ்வாறு எடுக்கப்பட்ட சில முடிவுகள் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.