மோசமான நிலையில் காணப்பட்ட ரயருடன் ஊர்காவற்றுறை வைத்தியசாலையிலிருந்து நோயாளியை ஒருவரை மேலதிக சிகிச்சைக்கக யாழ்ப்பாணம் கொண்டுசென்ற அம்புலன்ஸ் வண்டியின் ரயர் வெடித்து வீதியில் நின்றதை செய்தி சேகரிக்க முயன்ற ஊடகவியலாளர் ஒருவரை அம்புலன்ஸ் வண்டியின் சாரதியும் அதில் பொறுப்பாக சென்ற வைத்தியரும் தகாத வார்த்தைகாளால் திட்டி தாக்க முற்பட்ட சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
வேலணை மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திற்கு சற்று தொலைவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.
இது குறிது மேலும் தெரியவருகையில் –
சாரதியின் சரியான பராமரிப்பின்மையால் மிக மோசமான நிலையில் காணப்பட்ட ரயருடன் ஊர்காவற்றுறை வைத்தியசாலையிலிருந்து நோயாளியை ஒருவரை மேலதிக சிகிச்சைக்கக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி ஒன்று சென்றுள்ளது.
இன்நிலையில் குறித்த அம்புலன்ஸ் வண்டியின் ரயர் மண்கும்பான் பிள்ளையார் கோயிலை தாண்டி சிறுது தூரம் சென்றிருந்த நிலையில் வெடித்துள்ளது.
இதனால் குறித்த வண்டியில் இருந்த நோயாளி சிலமணிநேரம் வீதியில் பரிதவித்த நிலையில் காணப்பட்டது.
இன்நிலையில் குறித்த சம்பவத்த செய்தியாகக் சேகரிக்க ஒளிப்பதிவு செய்த ஊடகவியளாளர்
கடுமையாக திட்டிய சாரதியும் வைத்தியரும் கீழ்த்தரமான சைகையையும் காண்பித்து ஊடகவியளாளருக்கு அச்சுறுத்தல்
விடுத்ததுடன் அவரை தாக்கவும் முற்பட்டனர்.
இதேநேரம் சாரதி குறித்த அம்புலன்ஸ் வண்டியின் பராமரிப்பை சரியாக மேற்கொள்ளாதுள்ளமையும் 24 மணி நேரமும் சேவை செய்யவேண்டிய அம்புலன்ஸ் வண்டியின் சக்கரங்களின் ரயரை சரியாக பராமரித்து அதற்கான மாற்றங்களை செய்யாமையே இந்த சம்பவத்துக்கு காரணகாக இருந்தமையால் அச்சம்பவத்தை மறைக்கவே செய்தியை சேகரிக்கச் சென்ற ஊடகவியளாளரை தாக்க முற்பட்டுள்ளார்.
இதேனேரம் குறித்த சம்பவம் தொடர்பில் துறைசார் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.