100 குழந்தைகள் பரிதாபமாக பலி! குழந்தைகளுக்கான இருமல் சிரப் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தோனேசியாவில் திரவ இருமல் மருந்துகளை உட்கொண்ட 100 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியான சம்பவம் உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில்,மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் உயிரிழந்த 66 குழந்தைகளும் உட்கொண்ட சிரப் மருந்து இந்தியாவின் மைதன் பார்மக்யூட்டிக்கல்ஸால் (Maiden Pharmaceuticals) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டவையாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக விசாரணை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தோனேசியாவில் திரவ வடிவிலான மருந்துகளை சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் இறந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பில் இந்தோனேசிய சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“திரவ வடிவிலான சில மருந்துகளில் கடுமையான சிறுநீரக காயத்தை ஏற்படுத்தும் (நச்சு) பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன்,இதன் காரணமாக இந்த ஆண்டில் 99 இளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

200 குழந்தைகளுக்கு கடுமையான சிறுநீரக காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் தகவல் வந்துள்ளது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சிறுநீரக காயம் ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு தரப்பட்ட மருந்துகளில (நச்சுத்தன்மை கொண்ட) டைதிலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் அதிகளவு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டவையா அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையா என்பது குறித்து தகவல் இல்லை. அதேநேரத்தில் காம்பியாவில் பயன்படுத்தப்பட்ட இருமல் மருந்துகள், இங்கு விற்பனை செய்யப்படுவதில்லை என இந்தோனேசிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

இதேவேளை, பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மருந்துகளின் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை என்பதுடன், அவற்றின் விற்பனைக்கும், அவற்றை பரிந்துரை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin