மகிந்த குடும்பத்திற்குள் கடும் மோதல்

22வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் ராஜபக்ச குடும்பத்திற்குள் பாரிய மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலர் பொதுஜன பெரமுனவுக்குத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அந்தக் குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, பல பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு முன்பாக தனது கருத்தை வெளிப்படுத்தியமையே இதற்குக் காரணமாகும். மேலும் பசில் ராஜபக்சவுக்கு எதிராக சமல் ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலுகாக இரட்டை பிரஜாவுரிமையை இரத்து செய்தமை போன்று பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் இரட்டை பிரஜாவுரிமையை இரத்து செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக்சவிற்கு வழங்குவதற்கு தயாராகும் விடயம் தொடர்பில் சமல் ராஜபக்ஷ எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, அண்மைய நாட்களில் நாமல் ராஜபக்ஷவினால் அழைப்பு விடுக்கப்பட்ட எந்தவொரு கலந்துரையாடலிலும் சமல் ராஜபக்ச அல்லது ஷசீந்திர ராஜபக்ச பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர நாமல் ராஜபக்ச மற்றும் ஷசீந்திர ராஜபக்ச இருவரும் தமக்கு நெருக்கமான பொதுஜன பெரமுன பெறமுன குழுவுடன் தனித்தனியாக செயற்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மௌனமான கொள்கையை கடைப்பிடித்து வருவதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சமல் ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin