இலங்கைக்கு அண்மையில் ஏற்படவுள்ள பேராபத்து – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை வலுவடைந்து உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த தாழமுக்க நிலை நாளைய தினம் இந்திய கடல் பிராந்தியங்களில் மேலும் வலுவடையும் சாத்தியம் உள்ளதாகவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாழமுக்கம் எதிர்வரும் 24 ஆம் திகதி சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இம்மாதம் 20 ஆம் திகதி வடக்கு அந்தமான் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது எனவும் வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருந்தது.

இவ்வாறான நிலையில் 22ஆம் திகதி இன்று மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin