வடமராட்சி பருத்தித்துறை உபயகதிர்காமம் பகுதியில் தோட்ட கிணற்றில் விழுந்த இரண்டு இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் 7:00 மணியளவில் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்த இருவரை இவ்வாறு கிணற்று நீரில் மூழ்கில் மரணமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கிணற்றங்கட்டிலிருந்து தீபவளி கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு இளைஞன் சுய கட்டுப்பாட்டை இழந்து கிணற்றிற்க்குள் வீழ்ந்துள்ளதாகவும், அச்சமயம் குறித்த கிணற்றில் வீழ்ந்தவனை காப்பாற்ற கிணற்றிற்க்குள் குதித்த மற்றைய இளைஞனும் மரணமடைந்துள்ளான்.
சம்பவம் நடந்டாக சொல்லப்படும் கிணறு நிலமட்டத்தில் காணப்படுவதால் கிணற்றிற்க்குள் குதிக்காமலேயே காப்பாற்றியிருக்கலாம் என்று பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
குறித்த சடலங்கள் இரண்டும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தினையும், சம்பவம் தொடர்பாகவும் பருத்தித்துறை பொலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவத்தில் கணேசலிங்கம் லம்போசிகன், சுசிந்திரகுமார் சசிகாந்தன் ஆகிய 24 வயதுடைய இளைஞர்களே மரணமடைந்துள்ளனர்.
இரு இளைஞர்களின் மரணமும் பருத்தித்துறை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.