நிதி அமைச்சு பதவியை இழக்கும் நிலையில் ரணில்!

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சு பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர் சிறிலங்கா அதிபர் நிதியமைச்சர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரிவு 44 (3) இல் அமைச்சுக்கு ஒருவர் நியமிக்கப்படவில்லை என்றால் அதிபர் அந்த அமைச்சின் செயல்பாடுகளை 14 நாட்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சிறிலங்கா அதிபர் தற்போது பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக நிதியமைச்சர் பதவியையும் வகிக்கின்றார். எனவே 22ஆவது அரசியல் அமைப்பின் பிரகாரம் நிதி அமைச்சு பதவியை இழக்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin