கோதுமை மாவின் விலை சடுதியாக குறைப்பு

கோதுமை மா ஒரு கிலோவின் மொத்த விற்பனை விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது புறக்கோட்டையில் கோதுமை ஒரு கிலோகிராம் 250 ரூபா முதல் 260 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திறந்த கணக்கு மூலம் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

2022 டிசம்பர் 31 வரை திறந்த கணக்குகள் மூலம் கோதுமை மாவை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

ரொட்டி மற்றும் பிற வெதுப்பக பொருட்களின் விலையை குறைக்கும் நோக்கிலும், கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin