முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் காடழிப்பு,மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்ச்சியாக ,இடம்பெற்று வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலகம் மற்றும் பொலீசார் தவறியுள்ளதாக மக்கள் தெரிவித்த கருத்து செய்தியாக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி நிறஞ்சனா அவர்களினால் பாண்டியன் குளம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்ற கடந்த 26.10.22 அன்று முறையிடப்பட்டுள்ளது.
போர் நிறைவடைந்து 10 ஆண்டுகளைத் தாண்டி விட்ட ,இன்றைய காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ,இயற்கை வளங்கள் பாரியளவில் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் ,இருப்பது வேதனையளிக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரை கருங்கல் அகழ்வு, கிரவல் அகழ்வு, காடழிப்பு, மரவியாபாரம் என பல்வேறு வழிகளில் ,இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன.
மணல் அகழ்வின் மூலமும் பாரிய அளவில் இயற்கை வளங்களும் வனப்பகுதிகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் அதிகளவான வனப்பரப்பினை கொண்ட மாவட்டங்களில் முதன்மையாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது ,இந்த நிலையில் வனவளம் அழிக்கப்படுவதற்கு யார் பொறுப்பு என மக்கள் கருத்து தெரிவித்துவருகின்றார்கள்.
அரச நிர்வாகத்தினருக்கு தெரிந்தும் தெரியாமலும், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதுடன் பணம் படைத்தவர்களின் கைகளிலேயே காணிபிடிப்பும் செல்கின்றமை கவலையளிக்கின்ற விடையம் என மக்கள் தெரிவித்துவருகின்றார்கள்.
இன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய செய்கைக்காக ஒரு துண்டு காணிகூட ,இல்லாத மக்கள் பலர் வாழ்ந்து வருகின்றார்கள் அவ்வாறான மக்கள் அரசாங்கத்திடம் காணிகோரி கோரிக்கை விடுக்கப்பட்டும் , இதுவரை அவர்களுக்கான காணித்துண்டுகளை அரச அதிகாரிகள் வழங்கமால் பணம் படைத்தவர்களுக்கு வழங்கிவருகின்றமை கவலையளிக்கின்றது.
அரசாங்கத்தின் காணி வழங்கல் முறையின் பல்வேறு பட்ட படிமுறைகளான குத்தகை அடிப்படை,மற்றும் அபிவிருத்தி திட்ட அடிப்படை என திட்டங்கள் ஊடாக காணி உள்ளவர்களுக்கே தொடர்ச்சியாக காணிகள் வழங்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்து வருகின்றார்கள்
பாமர மக்களுக்கும் மிகவும் வறிய மக்களுக்கும், இவ்வாறான திட்டங்கள் ,இருப்பதும் தெரியாத விடையமாகவே காணப்படுகின்றது அவ்வாறு தெரிந்து கோரிக்கை வைத்தாலும் அவர்களுக்கு காணித்துண்டுகள் வழங்கப்படுவது மிக மிக குறைவு.
இந்த நிலையில் கடந்த 07.10.22 அன்று மாந்தை கிழக்கின் மாபியாக்கள் என மக்களால் அறியப்பட்ட நபர்கள் பொலீசாரின் பாதுகாப்புடனும் அரச அதிகாரிகள் உத்தியோகத்தர்களின் துணையுடன் சட்டவிரோ காடழிப்புக்கு உதவி செய்து வருகின்றார்கள் என மக்கள் தெரிவித்ததை செய்தியாக பிரசுரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர் ஜெகதீஸ்வரன் டிஷாந்த் பொலீசாரின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
27.10.2022 வியாழக்கிழமை மாலை வேளை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் ஊடக வியலாளர் பொலீஸ் நிலையம் அழைக்கப்பட்டு பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தியாளரின் பெயரிற்கு தொடர்புபடாத ஊடகவியலாளரை விசாரனை செய்துள்ளார்கள்.
பாண்டியன் குளம் பொலீசாரால் பத்திரிகை நிறுவனத்திற்கும் தொடர்பு கொண்டு கடந்த 07.10.22 அன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பில் செய்தியாளரை அடையாளப்படுத்துமாறு கோரியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ,இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த தவறும் அரச நிர்வாக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்
இவ்வாறான சம்பவங்களை வெளிப்படுத்தும் நோக்கில் மக்கள் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவித்து அதனை செய்தியாக்கம் செய்யும் ஊடகவியலாளர்களுக்கு ஊடக பணியினை முழுமையாக மேற்கொள்ளமுடியாது, இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றமை கவலையளிக்கின்றது.
வெளிமாவட்ட ஊடக வியலாளர்களை தொடர்புகொள்ளும் அரச அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ,இவ்வாறான செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளரின் புனைபெயர்,,இலக்கம் கொண்ட செய்தியாளரை, இனம் காட்டுமாறும் தெரிவித்து வருகின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 12.10.2020 அன்று முறிப்பு பகுதியில் சட்டவிரோத தேக்கு மரங்கள் அறுக்கப்படுவது தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ,இரண்டு ஊடக வியலாளர்கள் தாக்கப்பட்டு அவர்களது ஒளிப்பட கருவிகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்றுவரை வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் தொடர்ந்து வரும் நிலையில் மாவட்டத்தில் ,இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை செய்தி அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களும் மேலும் அதிகரித்துக்கொண்டு செல்கின்றமையினால் மன உளைச்சலுக்கு உள்ளாகிவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.