முச்சக்கரவண்டி கட்டணம் குறைக்கப்படலாம்! விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை

முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி,   முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தால் கட்டணத்தை குறைப்பதற்கு தயார் என இலங்கை சுயதொழில் வேலைவாய்ப்பு தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின்  தலைவர் மகிந்த குமார தெரிவித்துள்ளார்.

தற்போதைய 5 லீட்டர்  பெட்ரோல் ஒதுக்கீட்டை 10 லீட்டராக  அதிகரிப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினால் பயணிகள் போக்குவரத்தின்போது முச்சக்கர வண்டிகளில் முதல் கிலோ மீற்றருக்கு  அறவிடப்படும் கட்டணத்தில் 20 ரூபாவை குறைக்கப்பதற்கு தயார் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி டயர்கள், டியூப்கள், பெற்றி மற்றும் உதிரி பாகங்களின் அதிக விலையேற்றம் காரணமாக முச்சக்கர போக்குவரத்து தொழிலில் ஈடுபடும் 12 இலட்சத்துக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் விலையை குறைத்து நிவாரணம் வழங்குமாறும் அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் 5 லீட்டர் பெட்ரோல் ஒதுக்கீட்டை 10 லீட்டராக  அதிகரித்து தந்தால், பயணிகள் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் முதல் கிலோ மீட்டருக்கு  அறவிடப்படும் கட்டணத்தில் 20 ரூபா குறைக்கப்படும்.

முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பயணிகள் முச்சக்கரவண்டிகளில் பயணிக்க மறுத்து நடந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin