நண்பன் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு பணம் தேவைக்காக வீடு ஒன்றை உடைத்து தண்ணீர் மோட்டர் ஒன்றை திருடி 5 ஆயிரம் ரூபாவவுக்கு விற்பனை செய்து பிறந்தநாள் கொண்டாடிய 3 பேரை இன்று வியாழக்கிழமை (17) கைது செய்ததுடன் திருடப்பட்ட தண்ணீர் மோட்டர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
கருவப்பங்கேணி நாலவவீதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் சம்பவதினமான 15 ம் திகதி செவ்வாய்க்கிழமை 11.45 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு பாடசாலையில் பிள்ளையை ஏற்றிக் கொண்டு சுமார் 45 நிமிடத்தில் வீடு திரும்;பியபோது வீட்டின் கிணற்றில் பொருதப்பட்டிருந்த தண்ணீர் மோட்டர் திருட்டுப்போயுள்ளதை கண்டுள்ளார்
இதனையடுத்து வீதியில் இருந்த இளைஞர் குழு ஒன்றில் சந்தேகம் கொண்டு அவர்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த குழுவவைச் சேர்ந்த 20.20.24 வயதுடைய 3 பேரை கைது செய்து விசாரணையின் போது கைது செய்யப்பட்ட ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு பணத் தேவைக்காக தண்ணீர் மோட்டரை திருடியதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.