கோவிட்’ இன் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக சீன தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதை அடையாளம் கண்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் முன்னணி, தொற்றுநோயியல் நிபுணர் சோங் நோன்ஷான் தலைமையிலான ஆராய்ச்சி குழு இதனைக் கண்டறிந்துள்ளதாக கொழும்பின் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம், டெல்டா வகையை மிகவும் பரவும் தன்மை கொண்டதாகக் கண்டறிந்து, அதனை தீவிரமான மாறுபாடாக வகைப்படுத்தியுள்ளது.
இது இப்போது உலகில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாறியுள்ளது, இது அதிக இறப்புகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
தெற்கு சீனாவின் குவாங்சோவில், கோவிட் தொற்று பரவிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி சீனத் தடுப்பூசிகளின் இரண்டு அளவுகள் அறிகுறிகளைத் தடுப்பதில் 59.0 சதவீதமும், மிதமான அறிகுறிகளைத் தடுப்பதில் 70.2 சதவீதமும் மற்றும் கடுமையான அறிகுறிகளைத் தடுப்பதில் 100 சதவீதமும் பயனுள்ளவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள், 2021 ஆகஸ்ட் 14 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்டதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது