வைத்தியர்கள் மூவர், தாதியர்கள் 13 பேர், சிற்றூழியர்கள் 07 பேர் உள்ளடங்களாக 23 பேருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் சிலர் வைத்தியசாலையிலேயே சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
ஏனையவர்கள் வீடுகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தற்போதைய நிலையில் நுவரெலியா பொதுவைத்தியசாலையில் குறைந்தளவிலான வைத்தியர்கள், ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர் என்றும் இந்நிலையிலேயே 23 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறைந்தளவிலான வைத்தியர்கள், ஊழியர்களை வைத்து வைத்தியசாலையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் அனைவரும் கொவிட் 19 இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்னர் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.