எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு: வெளியாகியுள்ள புதிய தகவல்

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக 10.6 மில்லியன் லீட்டர் டீசல் வழங்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து வரும் சூப்பர் ஈஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நாளை (26.11.2022) வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் விவசாயிகள் மற்றும் கடற்தொழிலாளர்கள் எரிபொருள் நெருக்கடியால் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கும், கடற்தொழிலாளர்ளுக்கும் இந்த எரிபொருள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews