யாழில் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையம் திறந்து வைப்பு!

இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் நிதி உதவியுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் உள்ள பழைய பூங்காவில்  அமைக்கப்பட்ட சுற்றுப்புற காற்று தரக்கண்காணிப்பு நிலையம் இன்று சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில்  ஜெயசிங்கஅவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது,

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில்

இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் நிதியுதவியுடனும்,  யாழ்ப்பாணம் மாநகர சபையினால் நிறுவப்பட்ட சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் Ambient Air Quality Monitoring Station   பழைய பூங்காவில் திறந்து வைக்கப்பட்டது,

இந் நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்ஹ, (Dr.Ani jasinghe) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரகே (Mr.Supun s Pathirage), மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் பி.ஹேமந்த ஜெயசிங்கே ( Mr.P.B.Henmntha Jayasinghe), உலக சுகாதார நிறுவனத்தினைச் சேர்ந்த கலாநிதி வேர்கிங் மல்லவராச்சி (Mr.Verging Mallawarachchi), யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம,பிரதீபன், யாழ்ப்பாண பொது நல வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி யாழ்.மாநகர முதல்வர் யாழ்.மாநகர ஆணையாளர் இ.த. ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்,

Recommended For You

About the Author: Editor Elukainews