நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.
வருகின்ற 15ம் திகதி குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இரண்டு எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கப்பல்களின் வருகையினால் 2 இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதேவேளை, மசகு எண்ணெய் ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்னும் சில தினங்களில் நாட்டை வந்தடையவுள்ளது.
தொடர்ச்சியான மசகு எண்ணெய் வருகையினால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.