பாட்டாளிபுரம் பாமகள் தமிழ்வித்தியாலயத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தந்தையை இழந்த சுமார் நாற்பது பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.அமெரிக்காவில் வாழும் நன்கொடையாளர் ஒருவரது அனுசரனையுடன் காப்போம் அமைப்பு இவ்வுதவியினை நல்கியிருந்தது.நிகழ்வில் காப்போம் அமைப்பின் பணிப்பாளர் திரு.கு.பிரதீப்கரன் மூதூர் வலயக்கல்விப்பணிப்பாளர் Z.M.M.நளீம் அவர்கள் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் போன்றோர் கலந்து கொண்டு பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.இதன் போது கருத்துரைத்த வலயக்கல்விப் பணிப்பாளர் பின்தங்கியதும் வறுமையான பிரதேசத்தில் காணப்படுவதுமான பாடசாலைச் சமூகத்தினை நாடிவரும் உதவிகளினூடாகக் கிடைக்கின்ற வளங்களைச் சரியாகப் பயன்படுத்தி தமது கற்றல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் கல்வியின் மூலமான எதிர்காலத்தைக் கட்டமைத்துக் கொள்ளவும் மாணவர்களும் பெற்றோர்களும் சமூகமும் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.