நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக நிலவும் கடும் குளிரான காலநிலையால், சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், பல நோய்களுக்கு உள்ளாகுவதாகவும், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் குழந்தைகள் வெளியே சென்றால், நன்றாக உடை அணிந்து, தொப்பி போட்டு, இரண்டு காலுறைகளை அணிய வேண்டும் எனவும் இல்லையெனில், சளி ஆரம்பித்தால், காய்ச்சல் எளிதில் பரவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தூசி நிறைந்த இடத்தில் இருந்தால், முகமூடியை தொடர்ந்து பயன்படுத்துமாறும் மருத்துவர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். எடை குறைந்த மற்றும் குறைமாத குழந்தைகளுக்கு இந்த குளிர் நல்லதல்ல எனவும், அத்தகைய குழந்தைகளுக்கு, நன்றாக உடுத்தி, தொப்பி மற்றும் காலுறைகளை அணிய வேண்டும். குழந்தைகளின் உடல் வெப்பநிலை குறையும் போது நோய்வாய்ப்படலாம் என மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
Previous Article
இலங்கை மக்களை ஏமாற்றும் மின்சார சபை! மறைக்கப்படும் உண்மைகள்
Next Article
மகிந்த பிறப்பித்த அதிரடி உத்தரவு..!