அஞ்சல் சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் நேற்று மாலை 4 மணியில் இருந்து ஈடுபட்டு வரும் நிலையில், அஞ்சல் சேவையை தடையின்றிப் பேணுவதற்காக அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அஞ்சல் சேவையை தனியார் மயப்படுத்த முயற்சிக்கின்றமை, தனியார் ஊடாக அஞ்சல் விநியோக சேவையினை முன்னெடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் போன்றவற்றை எதிர்த்தே நாடளாவிய ரீதியில் 27 ஆயிரத்திற்கும் அதிகமான அஞ்சல் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Article
விவசாய அமைச்சின் அதிரடி முடிவு!