யாழ். மானிப்பாய் – கட்டுடையில் கிணற்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (12.12.2022) பதிவாகியுள்ளது.
கட்டுடை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது 43) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.