நாமல் ராஜபக்சவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை

கோட்டா கோ கம மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கின் சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்தி கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கின் மற்றொரு சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்துவதா, இல்லையா என்பது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 16 ஆம் திகதி பிறப்பிக்கப்படவுள்ளது.

கடந்த மே 9 ஆம் திகதி கோட்டாகோகம போராட்டக்களத்தில் முறையற்ற வகையில் உள்நுழைந்து பொல்லுகளால் மிக கொடூரமான முறையில் தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews