சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்

தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் பெற்ற சுமார் 6 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள், திணைக்களத்திற்கு பல மாதங்களாக கிடைக்காமையால் தற்காலிகமாக செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் வழங்கப்படுமெனவும் அந்த அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட அனைவருக்கும் முறையாக அட்டை அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் திணைக்களத்திற்கு 5 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திர அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக ஒரு நாள் சேவையின் ஊடாக 50 அனுமதிப் பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்படுவதாகவும் அடுத்த வாரத்திலிருந்து இந்த எண்ணிக்கை 300 ஆக அதிகரிக்கப்படும் எனவும் நாளாந்தம் சுமார் 1700 சாரதி அனுமதி அட்டைகள் வழங்கப்படுவதாகவும், வருடாந்தம் சுமார் 8 இலட்சம் அட்டை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews