அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து ஜனாதிபதி கூறியுள்ள விடயம்

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்படும் என பொது நிர்வாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் நடத்தப்பட்டால் சுமார் 8700 உறுப்பினர்கள் கொண்ட குழு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும். அவற்றினை பராமரிக்க 32000 இலட்சம் பணம் தேவைப்படும்.

நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா? இல்லையா என்று இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் (14.12.2022) ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கும், தெரிவு செய்யப்பட்ட 50 உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது தேர்தலை நடத்தினால் கிட்டத்தட்ட இருபது பில்லியன் செலவாகும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் அரச ஊழியர்களின் சம்பளம் குறைந்தது மூன்று மாதங்களுக்கு நிறுத்தப்பட வேண்டும், அந்த வருமானத்தை ஈட்டுவதற்கு மீண்டும் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews