தீ விபத்தில் சிக்குண்ட 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

முல்லேரியா அம்பத்தல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் காய்ச்சுவதற்காக தண்ணீர் சூடாக்கியை ஒன் செய்துவிட்டு தாய் வீட்டை விட்டு வெளியே சென்ற போது மின்சார ஹீட்டரில் இருந்து தீ பரவியதாக தெரியவந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட போது உயிரிழந்த குழந்தையின் தாயும் மூத்த சகோதரியும் வீட்டில் இருந்து வெளியில் இருந்ததாகவும், வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்டு தாயாருக்கு தெரியப்படுத்தியபோது, ​​ குழந்தை படுக்கையில் எரிந்துக் கொண்டிருப்பதைக் கண்டு குழந்தையைக் மீட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews