பல இலட்சம் அரச ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தீர்மானம்

அரச சேவையிலுள்ள 15 லட்சம் அரசு ஊழியர்களை 12 லட்சமாகக் குறைத்தால் பொது சேவைகள் ஆரோக்கியமான நிலையில் பயணிக்கும் என துறைசார் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்தார்.

இதுவரை காலமும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு, வெற்றிடங்கள் இருக்கும் போது அல்ல மாறாக அரசாங்கத்தின் பல்வேறு கொள்கைத் தீர்மானங்களினூடாகவே மேற்கொள்ளப்பட்டன என்றும், பொதுச் சேவை மிக எளிதாகப் பராமரிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வலியுறுத்தினார்.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதுடன், இதே எண்ணிக்கையை மீண்டும் அரசுப் பணியில் அமர்த்தும் திட்டமும் சில காலமாக நடைமுறையில் உள்ளது.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பொதுச் செலவினங்களைக் குறைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, ஓராண்டில் சுமார் இருபதாயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலும், இவ்வளவு தொகை மீண்டும் அரசுப் பணியில் சேர்க்கப்படாது. இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அடுத்த சில வருடங்களில் அரச சேவையை படிப்படியாக குறைக்க முடியும் எனவும் செயலாளர் தெரிவித்துள்ளர்.

Recommended For You

About the Author: Editor Elukainews