பல்கலைகழக மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகித்து வந்த வியாபாரி கைது…!

அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் பல்கலைக்களக மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகித்து வந்த வியாபாரியின் வீட்டை நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலையில் முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்து கஞ்சாதூள், மற்றும் மாவா என்ற போதை பொருள் பெருமளவில் மீட்டதுடன் 41 வயதுடைய போதை பொருள் வியாபாரியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அக்;கரைப்பற்று பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ,எம்.எம். பண்டார விஜயதுங்காவின் வழிகாட்டலில்  பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப்இன்பெஸ்டர் பகீரதன் தலைமையிலான குழுவினர் சம்பவதினமான  இன்று  மாலை 5 மணிக்கு ஒலுவிலில் பிரதேசத்திலுள்ள போதை பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன் போது அங்கி வியாபாத்தில் ஈடுபட்டிருந்த 41 வயதுடைய வியாபாரியை கைது செய்ததுடன் கஞ்சா மற்றும் புகையிலை கலந்து 300 கிராம் தூள்,  மாவா என்றழைக்கப்படும் 1 அரை கிலோ  போதைபொருள்,  மற்றும் கஞ்சாவை புகைப்பதற்கா பயன்படுத்தப்படும் ஒ.சி.பி. என்ற பொருள் 30 பெட்டி என்பவற்றை மீட்டுள்ளதுடன்

இதில் கைது செய்யப்பட்ட வியாபாரி இந்த போதை பொருளை நீண்ட காலமாக  அந்த பகுதியிலுள்ள பல்கலைக்கழகத்தில் கற்றுவரும்  மாணவர்களுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews