இன்று சர்வதேச அளவில் பேச்சுப் பொருளாக இருக்கும் விவகாரங்களில் இலங்கையின்
கடன் மீழ செலுத்த முடியாத வங்குரோத்து நிலை மற்றும் நிலையான அரசாங்கம் இல்லாத
இலங்கைஅரசு குறித்த பேச்சுகளும் முக்கியமானவை. இலங்கைத்தீவின் தெற்கில்
பாராளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரையும் சில மாதங்களுக்கு முன்பாக சாதாரணமக்கள்
அடித்து துரத்தினர். ஆனாலும் பாராளுமன்ற பதவிகளை விட்டு நாட்டை விட்டு ஒடியவர்கள்
விட்டு சென்ற பதவிகளையும் நாட்டிற்குள்ளேயே தலைமறைவாக இருந்த
உறுப்பினர்களையும் ஒன்று சேர்த்து புதிய பாராளுமன்றமாக உருவாக்கி இன்றய இலங்கைத்
தலைவர் ரனில் விக்கிரமசிங்கா தலைமைப் பதவியை பெற்ற கொண்டுள்ளார்.
அத்தடன் ஏற்கனவே இருந்த நாட்டின் தலைவருக்குகான பதவியின் அதிகாரங்கள்
அண்மையில் புதிதாக நடைமுறைக்கு ஏற்று கொள்ளப்பட்ட 21ஆவது அரசியல் திருத்தத்தின்
மூலம் பாராளுமன்றத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. புதிதாக பதவில் உள்ள அரசியல் தலைவர்
ரணில் விக்கிரமசிங்காவும் தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல. தற்போது
பதவில் உள்ள பாராளுமன்ற அங்கத்தவர்களை தெருவில் கண்டால் மக்கள் கல் எடுத்தது
அடிக்கும் நிலையே உள்ளது.
ஆக நடைமுறையில் உள்ள பாராளுமன்றத்திற்கான சட்ட ஆங்கீகாரம் அல்லது ஆழும் உரிமை
சர்வதேச அரங்கில் கேழ்விக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில்
இலங்கை சனநாயகத்தின் மீதிருந்த நம்பிக்கை அழிந்து போய் உள்ளது. இத்தகைய ஒரு
அரசாங்கத்துடன் தமிழர் தரப்பு தேசிய இனப்பிரச்சனை குறித்த பேச்சு வார்த்தைக்கு செல்வது
என்பது எவ்வளவு காதிரமானது என்பது தான் இன்றய கேழ்வி.
கடந்த காலங்களில் இருந்த தமிழ் மக்களின் பல பிரதி நிதிகளும் அவ்வப்போது வந்த
அரசாங்கங்களுடன் தமது தேசிய இனப்பிரச்சனையை தீர்பதை நோக்கமாக கொண்டு
பேச்சுவாத்தைகள் நடாத்தி இருந்தனர். அனைத்த பேச்சு வார்த்தை முடிவுகளும் பாராளுமன்ற
விவாதங்களால் தோற்கடிக்க பட்டிருந்தது . அல்லது எடுக்கப்பட்ட தீர்வ திட்டங்கள்
பாராளுமன்றத்திற்கு போகாமலே நாட்கடத்தப்பட்ட சந்தர்ப்பங்களே அதிகம் உள்ளது .
கடந்த காலங்களில் இடம் பெற்ற இனப்பிரச்சனைக்கான பேச்சுகள்யாவும் சர்வதேச
நாடுகளிடம் கடன் பெற்று கொள்வதற்கும் நேரடி முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்களை
உருவாக்கும் நோக்குடனும் இடம் பெற்றவையே . ஆதாவது சர்வதேச நாடுகள் மத்தியில்
வெறும் மாயத்தோற்றம் ஒன்றை உருவாக்கும் வகையில் இடம் பெற்றவையாகவே பல
ஆய்வாளர்களினதும் கருத்தாக உள்ளது.
இன்று சர்வதேச செய்தி நிறுவனங்களில் வெளி வரும் செய்திகள் அனைத்தும் இலங்கையில்
எந்த வல்வரசுக்கு எவ்வளவு பங்கு உள்ளது என்ற பங்கு போடும் வகையிலேயே
அமைந்துள்ளது. இதிலே முதன்மை பங்கு சீனாவுக்கும் இரண்டாம் பங்கு இந்தியாவுக்கும்
மூன்றாம் நான்காம் பங்குகள் அமெரிக்காவுக்கும் யப்பானுக்கும் என ஒவொரு செய்தி
நிறுவனங்களும் செய்தி வெளியிடுவதையே காணகூடியதாக உள்ளது. ஏனெனில்
அவ்வப்போது பில்லியன் டாலர் கணக்கில் யாரிடம் எல்லாம் இலங்கை அரசாங்கங்கள்
கடன் வாங்கின. யாரெல்லாம் உதவி செய்தார்கள் என்று செய்தி நிறுவனங்கள் பட்டியல்
இட்டு போடுவதை உலக செய்திகளில் காண கூடியதாக உள்ளது.
கடந்த திங்கட்கிழமை குளோபல் ரைம்ஸ் என்ற சீன அரசாங்கத்தின் செல்வாக்கு பெற்ற
பத்திரிகையின் இணையதளத்தில் வெளி வந்த செய்தியில் இலங்கை அரசாங்கத்தை கடன்
பழு நிலையிலிருந்து நீக்கவது குறித்த சர்வதேச நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பீஜிங்கில்
பேச்சு வார்த்தை செய்தது. இது குறித்து சீன வெளிவிவகார அமெச்சக பேச்சாளர் மாவோ நிங்
பேசும் பொழுது இலங்கையின் கடன் பழு நிலை குறித்த சீனா இரக்கம் கொண்டள்ளதாக
குறிப்பிட்டார்.
இலங்கைக்கு கடன் கொடுத்து உதவிய நாடுகளையும் உலக நிறுவனங்களையும் சீனாவுடன்
இணைந்து செயற்படுமாறு வேண்டி கொள்வதாகவும் இலங்கையின் கடினமான பொருளாதார
நெருக்கடியை புரிந்த கொண்டு செயற்படுமாறும் கேட்டு கொள்வதாக சீன வெளிவிவகார
அமெச்சக பேச்சாளர் கூறினார்
மேலைத்தேய நிறுவனங்களுக்கும் சீனாவுக்கும் இலங்கையில் இரக்கம் இருக்கிறதோ
இல்லையோ இந்த தீவில் தமது இருப்பு உத்தரவாதப்படுத்தி கொள்ள வேண்டியது
முக்கியமானதாகும். மேலை நாடுகளுக்கு தமது நலன்களுக்கு சாதகமான அரசாங்கம் இருப்பில்
இருக்க வேண்டும் . அதேபோல இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்
சர்வதேச அரசுகளால் ஏற்றுகொள்ளப்பட்ட வகையில் சீனாவின் நிலை இலங்கையில்
பாதுகாப்பான தாக இருக்கும் என்ற உத்தரவாதம் கிடைக்கிறது.
இந்த வகையில் வல்லரசுகளும் நிறுவனங்களும் இலங்கை நிலைமை குறித்து தமக்குள்ளே
தீர்மானித்து கொள்ளும் நிலை வந்துள்ளது. இதில் இலங்கை மக்களுக்கோ அரசாங்கத்துக்கோ
தமது எதிர் காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் அருகி வருவதையே காண கூடியதாக உள்ளது.
ஆக சர்வதேச அளவிலும் உள்நாட்ட அளவிலும் இலங்கையில் தேசிய இனப்பிரச்சனையை
தீர்த்த கொள்வதாயின் யாருடன் பேச வேண்டும் என்ற கேழ்வி தற்பொழுது எழுந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரதி நிதிகளுடன் பேச்ச வார்த்தை செய்வதற்க அவர்களிடம்
ஒற்றமை இல்லை என்பது நடைமுறை இலங்கைத்தலைவர் ரனில் விக்கிரமசிங்கா
அவர்களின் கருத்தாக செய்திகளில் காண கூடியதாக இருந்தது.
ஆழும் உரிமையே உறுதியானதாக இல்லாத ஒரு அரசாங்த்தை நடாத்தம் இலங்கை
தலைமையுடன் பேச்சு நடாத்துவது தீர்மானங்களும் தீர்வுகளும் எவ்வாறு உறுதியானதாக
இருக்க முடியும். சர்வதேச அளவில் தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தை செய்கிறோம் என்ற ஒரு
மாயதோற்றத்தை உருவாக்கும் அதே பழைய திட்டத்துடனேயே நடைமுறை அரசாங்கம்
செயற்படுகிறது. இந்த நிலையை அறிந்தும் தமிழ் தலைவர்கள் தமக்குள் பிழவுபட்டு கிடப்பது
தான் அர்த்தமற்றதாக தெரிகிறது.
கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்ட பார்க்கப்படுமானால் நடைமுறை இலங்கை
அரசாங்கம் எடுக்கும் எந்த தீர்மானமும் 21ஆம் அரசியல் திருத்த சட்டத்திற்கு அமைய அதி
உயர் சபையான பாராளுமன்றத்திலே விவாதத்திற்கு விட பட வேண்டிய தேவை உள்ளது.
ஆனால் பதவி அதிகாரம் அற்ற நாட்டின் தலைவருடன் பேச்ச நடாத்துவதிலும் பார்க்க
நடைமுறை பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு குழுவுடன் தமிழ்த்தரப்ப பேசுவது
தமிழ் மக்களுக்க அதிக அஙிகீகாரத்தை தரவல்லது என்றே தெரிகிறது.
இலங்கை பாராளுமன்ற தரப்பும் மறு புறத்தில் தமிழ் கட்சிகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு
பொது குழுவாக தமிழ் தரப்பும் பேச்சு வார்த்தை செய்யும் போழுது அதிக அரசியல் அங்கீகாரம்
சர்வதேச அளவில் தமிழ் தரப்பிற்கும் கிடைக்கும் என்பதுடன் பாராளுமன்றத்தால் தெரிவு
செய்யப்பட்ட குழு என்ற வகையில் மீழவும் பாராளுமன்ற விவாத நாடகங்களுக்குள் எடுத்து
செல்ல முடியாது என்ற நிலையும் ஏற்படுகிறது.
இதனால் சர்வதேச நாடுகள் மத்தியில் தமிழ் மக்களின் நியாயமமான கோரிக்கைகள்இ அது
எத்தகைய கோரிக்ககையாக இருந்தாலும் பிரச்சார படுத்தப்படுவதுடன் சர்வதேச அரங்கில்
மத்தியஸ்தப்படுத்தப்படும். இந்த வகையில் பேச்சு வார்த்தைக்கு இலங்கை அரசுத்தரப்பு
தன்னை தயார் செய்ய முடியாது போனால் அங்கத்துவர்கள் மத்தியில் பாராளுமன்றத்தில்
போடும் சண்டைகள் மேலும் இலங்கைத்தீவில் யாரிடம் ஒற்றமையில்லை என்பதையும்
எடுத்து காட்ட வாய்ப்பாக அமையும் என்றே தெரிகிறது .