தற்போது நாடளாவிய ரீதியில் இறைச்சிகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன.
இதுதொடர்பில் பேராதனையில் உள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, சீரற்ற காலநிலை மற்றும் திடீர் குளிர் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக பாரிய உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கால்நடைகளின் மரணங்கள் தொற்று நோயினால் ஏற்படவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் இறைச்சிகளை கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.