2022ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணம் முதலிடம் பெற்ற நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் 129 பதக்கங்களைப் பெற்று, 2ஆம் இடத்தை பெற்றுள்ளது.
மாகாண விளையாட்டுத் திணைகளத்தின் ஏற்பாட்டில் வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் இடையே நடைபெற்ற குழு மற்றும் மெய்வல்லுனர் என அனைத்து விளையாட்டு போட்டி நிகழ்வின் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டம் தொடர்ந்தும் 3வது தடைவையாகவும் 2வது நிலையினை பெற்றுக்கொண்டுள்ளது.
மாகாண விளையாட்டு விழாவில் 86 தங்கம், 59 வெள்ளி, 38 வெண்கலம் உள்ளடங்கலாக 183 பதக்கங்களைப் பெற்று யாழ்ப்பாண மாவட்டம் 1ஆம் இடத்தினையும், முல்லைத்தீவு மாவட்டம் 42 தங்கம், 39 வெள்ளி, 42 வெண்கல பதக்கங்களுமாக மொத்தமாக 123 பதக்கங்களைப் பெற்று 2ஆம் இடத்தினை பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டம் 19 தங்கம் 16 வெள்ளி 20 வெண்கல பதக்கங்களாக மொத்தம் 55 பதக்கங்களைப் பெற்று 3ஆம் இடத்தை பெற்றுக் கொண்டது.
வவுனியா மாவட்டம் 19 தங்கம் 12 வெள்ளி, 17 வெண்கலம் என 48 மொத்தப் பதக்கங்களைப் பெற்று 4ம் இடத்தினையும், கிளிநொச்சி மாவட்டம் தங்கம் 14, வெள்ளி 22, வெண்கலம் 30 என 66 பதங்கங்களையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.