மாடுகளை கரையேற்ற ஆற்றில் இறங்கி இளைஞனை முதலை இழுத்துச் சென்ற நிலையில் சடலமாக மீட்பு

கல்முனை பிரதேசத்தையும் நாவிதன்வெளி பிரதேசத்தையும் இணைக்கும் கிட்டங்கி ஆற்றில் மாடுகளை மேய்ப்பதற்காக் இறங்கிய இளைஞன் ஒருவரை முதலை இழுத்துச் சென்று காணாமல் போன இளைஞனை இன்று சனிக்கிழமை (24)  சடமாக மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

கல்முனை சேனைக்குடியிருப்பு 1 பிரிவு  விக்னேஸ்வரன் வீதியை சேர்ந்த 30 வயதுடைய சுகிர் பிரதாஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சேனைக்குடியிருப்பில் இருந்து நாவிதன்வெளி பகுதிக்கு சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை மாடுகளை மேப்பதற்காக கிட்டங்கி பாலத்தின் ஊடாக கொண்டு சென்றபோது மாடுகள் மாடுகள் இறங்கியதையடுத்;து அதனை அங்கிருந்து கரையேற்றுவதற்காக  இளைஞன் ஆற்றில் இறங்கியபோது இளைஞனை முதலை பிடித்து இழுத்து சென்று காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து இளைஞனை மீட்பதற்காக பொதுமக்களுடன் கடற்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதலை மேற்கொண்ட நிலையில் இன்று சடலம் மீட்கப்பட்டனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட் சடலத்தை  பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் இது தொடர்பாக கல்முனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews