இலங்கையில் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடு! அரசாங்கம் வழங்கியுள்ள உறுதி

இலங்கையில் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த சில மாதங்களில் தளர்த்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் நாட்டில் ஏற்பட்ட அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக 1,465 வகையான பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எனினும் 795 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே நீக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில பொருட்கள் நாட்டில் தாராளமாக கிடைக்கின்றன அல்லது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய சில பொருட்கள் உள்ளன.

அவற்றின் இறக்குமதியை அரசாங்கம் முற்றாக தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது 670 தயாரிப்புகள் இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றில் சில பொருட்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேங்காய் துருவல், வெசாக் விளக்குகள் மற்றும் மூங்கில் தொடர்பான பொருட்கள் போன்ற பொருட்களை தொடர்ச்சியாக இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டுமா என நிதி இராஜாங்க அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews