ஆழிப்பேரலையால் உயிர் நீத்தவர்களது 18 வது ஆண்டு நினைவேந்தல் இன்று உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இடம் பெற்றுள்ளது.
முதல் நிகழ்வாக பொது நினைவு தூபிக்கு மலர் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.
இதில் மலரஞ்சலிஐ வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தி அணிவிக்க தொடர்ந்து மலர் மாலைகளை பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம் ஏ சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்ம், கடற்றொழிலாளர் சமாச பொது முகாமையாளர் பாலசிங்கம், உட்பட பலரும் அணிவித்ததை தொடர்ந்து பொது ஈகை சுடரினை பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி ஏற்றி வைக்க சம நேரத்தில் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களது கல்லறைகள், வருகை தந்த முக்கியஸ்தர்கள் ஏற்றி வைத்தனர்.
தேசிய கொடியினை மருதங்கேணி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏற்றினார்.
இதில் பல நூற்றுக்கணக்கான உறவுகளை இழந்தவர்கள் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி அங்சலி செலுத்தினர்.