ஜஸ் போதை பொருள் வைத்திருந்த 70 வயதுடைய ஒருவருக்கு ஒருவருட சிறை 10 ஆயிரம் ரூபா அபராதம் – அக்கரைப்பற்று நீதிமன்றம் தீர்ப்பு

ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த  குற்றச்சாம்டில் கைது செய்யப்பட்ட  70 வயதுடைய ஒருருக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதித்து 10 ஆயிரம் ரூபா அபராதமாக செலுத்துமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா நேற்று செவ்வாய்க்கிழமை (27) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 9 கிராமும் 850 மில்லி கிராமும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு 3 மாதகாலமாக விளக்கமறியலில் வைக்கப்படார்.

இதனை தொடர்ந்து கடந்த முறை  வீடியோ காணொளி மூலமாக ,அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டுப் பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டதுடன்  குறித்த குற்றச்சாட்டினை; குற்றவாளி ஏற்றுக் கொண்டதை அடுத்து அவரது அடையாள மற்றும் தண்டணைத் தீர்ப்புக்காக நேற்று செவ்வாய்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்

இதன்போது அவருக்கு ஒருவருட சிறைத் தண்டணை விதித்து முதல் 6 மாத கடுழிய சிறைத் தண்டனையும் மிகுதி 6 மாத காலச் சிறைத் தண்டணை 7 வருட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதவான் தீர்ப்பளித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews