சமூக வலைத்தளங்கள் ஊடாக வீசா மோசடி!

வட்ஸ்அப், தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் வீசா மோசடி தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமது வீசா பிரிவு, வீசாவிற்கான விண்ணப்பம் தொடர்பான செயற்பாடுகளுக்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தாது என குறிப்பிட்டுள்ளது. வேலை வாய்ப்புகளை தாம் உறுதிப்படுத்தவில்லை என்றும் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தூதரகத்திற்கு காப்பீடு தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீசா சேவைகளை வழங்குவதாகக் குறிப்பிட்டு ஒரு தரப்பினர் மோசடியில் ஈடுபடுவதற்காக இவ்வாறு செயற்படுவதாக அமெரிக்கத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews